நான் ரசித்த திரை கவிதைகள் - ஸ்ரீதர்

இங்கு நான் ரசித்த சில திரை பாடல்கள் தர உள்ளேன் - - ஸ்ரீதர்

Tuesday, October 16, 2007

யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்புத் தொல்லையோ
பாவம் ராதா...

Thursday, February 01, 2007

பூவே பூச்சூட வா - பூவே பூச்சூட வா

பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா

(பூவே)

அழைப்பு மணி இந்த வீட்டில் கேட்டாலும்
ஒடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை
கண்ணில் வென்னீரை வார்த்தேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
தீப தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் மெய்யாக வந்தாய்
இந்த கண்ணில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

(பூவே)

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

(பூவே)

Saturday, August 12, 2006

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே -- Autograph

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!

மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ? நீ மோதிவிடு!

Monday, July 10, 2006

நிலாவே வா.. -- மௌன ராகம்

நிலாவே வா.. செல்லாதே வா..

எந்நாளும் உன் பொன்;வானம் நான்

எனை நீதான் பிரிந்தாலும்;

நினைவாலே அணைப்பேன்...



நிலாவே வா.. செல்லாதே வா..

(இசை)



காவேரியா கானல் நீரா.. பெண்மை என்ன உண்மை

முள்வேலியா முல்லைப்பூவா.. சொல்லு கொஞ்சம் நில்லு

அம்மாடியோ நீதான் இன்னும் சிறுபிள்ளை

தாங்காதம்மா நெஞ்சம்.. நீயும் சொன்ன சொல்லை

பூந்தேனே நீதானே.. சொல்லில் வைத்தாய் முள்ளை..



நிலாவே வா.. செல்லாதே வா..

(இசை)



பூஞ்சோலையில் வாடைக்காற்றும் ஆட சந்தம் பாட

கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது

ஒரே ஒரு பார்வை தந்தாலென்ன தேனே..

ஒரே ஒரு வார்த்தை சொன்னாலென்ன மானே..

ஆகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணே..



நிலாவே வா.. செல்லாதே வா..

எந்நாளும் உன் பொன்;வானம் நான்

எனை நீதான் பிரிந்தாலும்;

நினைவாலே அணைப்பேன்...

நிலாவே வா.. செல்லாதே வா..

எந்நாளும் உன் பொன்;வானம் நான்

இதயம் ஒரு கோவில் -- இதய கோவில்

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன் (2)

(இதயம் ஒரு)

ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜ“வ நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல
எனது ஜ“வன் ஒன்றுதான் என்ரும் புதிது

(இதயம் ஒரு)

காமம் தேடும் உலகிலே ஜ“வன் என்னும் கீதத்தால்
ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜ“வன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜ“வன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது

(இதயம் ஒரு)

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜ“வன் எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்ரும் வாழ்கவே

(இதயம் ஒரு)

Sunday, June 04, 2006

ஒரு நாள் ஒரு கனவு - கண்ணுக்குள் நிலவு.

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது
வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திரப் பூப்பறித்தோம்
வெள்ளிப்பிறைப் படகெடுத்து ஆகாயகங்கை அலைகளில் துள்ளிக் குதித்தோம்
நீச்சலடித்திட

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது

நதியோரம் நதியோரம் என்னைச் சுற்றிப் பறந்தது கிளிக்கூட்டம்
கிளிக்கூட்டம் கிளிக்கூட்டம் வந்ததெனில் நீயொரு பழத்தோட்டம்
பறக்கும் கிளிகளிலே ஒரு கிளி உனைப்போல் உருவெடுக்க
கிளியே உனக்காக நானும் கிளிபோல் அவதரிக்க
இறக்கைகள் கொண்டு வா...விண்ணிலே பறப்போம்...
உள்ளங்கள் கலப்போம்...வண்ணம் சூடும் வண்ணக்கிளி

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது

எதனாலே வெண்ணிலவே அவள் போல் நீயும் இளைத்தயோ ஹோ
உன் மனதை உன் மனதை எனைப்போல் எவருக்கும் கொடுத்தாயோ ஹோ
ஒளிவிடும் முகத்தினிலே கறையேன் முத்த அடையாளங்களோ
இரவில் விழித்திருந்து நீதான் கற்றதென்ன பாடங்களோ
மின்னிடும் கண்ணிலே...என்னவோ உள்ளதே...
சொல்லம்மா சொல்லம்மா...நெஞ்சிலாடும் மின்னல் கொடி

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது
வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திரப் பூப்பறித்தோம்
வெள்ளிப்பிறைப் படகெடுத்து ஆகாயகங்கை அலைகளில் துள்ளிக் குதித்தோம்
நீச்சலடித்திட

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது