நான் ரசித்த திரை கவிதைகள் - ஸ்ரீதர்

இங்கு நான் ரசித்த சில திரை பாடல்கள் தர உள்ளேன் - - ஸ்ரீதர்

Friday, April 21, 2006

Thursday, April 06, 2006

ஜெர்மனியின் செந்தேன் மலரே

ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
காதல் தேவதையே
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்

(ஜெர்மனியின்)

சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே
காதல் நாயகனே
காதல் நாயகன் பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்

(சித்திரமே..)

பூஞ்சோலையே பெண்ணானதோ இரு
பொன்வண்டுகள் கண்ணானதோ

பூங்கோதையின் நெஞ்சோடு நீ இனி
எந்நாளுமே கொண்டாடலாம்

லா ல வா வா வா
குளிர் நிலவின் ஒளி நீயே

லா ல லா வா வா
எனதன்பின் சுடர் நீயே

சுகம் நூறாக வேண்டும் ப ப ப ப பா
உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன்
நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம்

(ஜெர்மனியின்)

பேரின்பமே என்றாலென்ன அதை
நீ என்னிடம் சொன்னாலென்ன

பேரின்பமே நீதானம்மா அதை
நீ என்னிடம் தந்தாலென்ன

லா ல லா வா வா
எனை அணைத்தே கதை சொல்ல

லா ல லா வா வா
அதைச் சொல்வேன் சுவையாக

வெகு நாளாக ஆசை ர ப ப ப பா
என் மார்பில் பூமாலை போலாட வந்தாய்
நீ சொல்லும் பாடம் சொர்க்கம்

(சித்திரமே)

(ஜெர்மனியின்)

ப ப பபபபா ப ப பபபபா....

Saturday, April 01, 2006

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

ஓ...கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

(பூங்காற்றிலே)

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வளிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா...

(பூங்காற்றிலே)

கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை

வானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

(பூங்காற்றிலே)

கண்ணீரே கண்ணீரே

இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே...
இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே...

கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே...
தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே காண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே
கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே...
தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே காண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே

உன் பார்வை பொய்தானா பெண்ணென்றால் திரைதானா
பெண் நெஞ்சே சிறைதானா சரிதானா...
பெண் நெஞ்சில் மோகம் உண்டு அதில் பருவத் தாபம் உண்டு
பேராசைத்தீயும் உண்டு ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
புதிர் போட்ட பெண்ணே நில் நில் பதில் தோன்றவில்லை சொல் சொல்
கல்லொன்று தடைசெய்த போதும் புல்லொன்று புதுவேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கல்லொன்று தடைசெய்த போதும் புல்லொன்று புதுவேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும் கண்ணில் கண்ணே கண்ணீர் இன்ப கண்ணீரே...
தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே காண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே
கண்ணீரே...

பால் நதியே நீ எங்கே வரும் வழியில் மறைந்தாயோ
பல தடைகள் கடந்தாயோ சொல் கண்ணே...
பேரன்பே உந்தன் நினைவு என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு உன் துன்பம் என்பது வரவு
ஏ மர்ம ராணி நில் நில் ஒரு மௌளன வார்த்தை சொல் சொல்
உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்
உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும் கண்ணில் கண்ணே கண்ணீர் இன்ப கண்ணீரே
கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே...
தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே காண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே
கண்ணீரே...

நறுமுகையே நறுமுகையே

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)

மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பாண்டினாடனைக் கண்டு என் மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் (2)
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை இடையினில் மேகலை இருக்கவில்லை
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அன்னினவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)

யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்ப்பொய்கை ஆடுகையில் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)

பச்சைக் கிளிகள் தோளோடு
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம் பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

(பச்சைக் கிளிகள்)

அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம்
அடி பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் - அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயசரிதம்
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்

(பச்சைக் கிளிகள்)

உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

(பச்சைக் கிளிகள்)

கலகலவெனப் பொழியும் பொழியும்

அன்பே இது நிஜம்தானா...
என் வானில் புது விண்மீனா...
யாரைக் கேட்டது இதயம் உன்னைத் தொடர்ந்து போக
என்ன துணிச்சல் அதற்கு என்னை மறந்து போக
இருந்தும் அவை இனிய வரிகளே...

கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ
கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ
விரல் தொடவில்லையே...நகம் படவில்லையே...
விரல் தொடவில்லையே நகம் படவில்லையே உடல் தடையில்லையே
இது போல் ஒரு இணையில்லையே

கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ

விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே
உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே
விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே
உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ

கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ

அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லையே...
நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லையே...
அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லையே
நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லையே
யாரைக் கேட்டது இதயம்...யாரைக் கேட்டது இதயம்
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ...விழி தொடுவது விரல் தொடவில்லை

கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ
ஆஆஆ...
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ

சின்னச்சின்ன மழைத்துளிகள்

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி இரு துளி
சில துளி பல துளி
படபட தடதட சடசடவென சிதறுது

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்
சக்கரவாகப் பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச்சின்ன)

சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேந்துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது

(சக்கரவாகமோ)

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலயிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய் (2)

ஓஹோஹோ ஒஹோ ஒஹோ ஓஹொஹொஹோஹோ (3)

(சக்கரவாகமோ)
(சின்னச்சின்ன)