நான் ரசித்த திரை கவிதைகள் - ஸ்ரீதர்

இங்கு நான் ரசித்த சில திரை பாடல்கள் தர உள்ளேன் - - ஸ்ரீதர்

Saturday, May 13, 2006

என்னவளே அடி என்னவளே (காதலன்)

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று
உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன் (என்னவளே)

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி (என்னவளே)

கோகிலமே நீ குரல்கொடுத்தால் உன்னைக்
கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்
வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் (என்னவளே)

Thursday, May 11, 2006

சாதி மல்லிப் பூச்சரமே - (அழகன்)

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையுள்ள ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

(சாதி மல்லிப்)

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்லா ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

(சாதி மல்லிப்)

உலகமெல்லாம் உண்ணுப்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா
படிச்சத புரிஞ்சு நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

(சாதி மல்லிப்)

எவனோ ஒருவன் வாசிக்கிறான் - (அலைபாயுதே)

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (2)
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி (2)
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லை முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா (2)
இரக்கம் இல்லை இரவுகளில் இது எவனோ அனுப்பும் மாறுதலா
எந்தம் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (2)

ஸ்னேகிதனே ஸ்னேகிதனே (அலைபாயுதே)

நேற்று முன்னிரவில் உன்னி (?)
நேற்று முன்னிரவில் உன்னித் திலவு மடியில் காற்று நுழைவதேனோ (?)
உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதேனோ
மனம் கலங்கிப் புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் (2)
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு ஸ்னேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே

ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே

சின்னச் சின்ன அத்துமீறல் புரிவாய்
என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்...மலர்கள் மலர்வாய்
பூப்பரிக்கும் பக்தன் போல மெதுவாய்
நான் தூங்கும்போது விரல் நகம் களைவாய்...சத்தமின்றித் துயில்வாய்
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி சேவைகள் செய்யவேண்டும்
நீயழும்போது நான் அழ நேர்ந்தால் துடைக்கின்ற விரல் வேண்டும்

ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு ஸ்னேகிதனே

நேற்று முன்னிரவில் உன்னித் திலவு மடியில் காற்று நுழைவதேனோ (?)
உயிர் கலந்து களிந்த்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதேனோ
மனம் கலங்கிப் புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் (2)
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்...
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்...காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்...உப்பு மூட்டை சுமப்பேன்
உன்னையள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்
வெளிவரும்போது விடுதலை செய்து வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்

ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு ஸ்னேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே

ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு ஸ்னேகிதனே

உன்னோடு வாழாத வாழ்வென்ன (அமர்க்களம்):

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே
நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிரு
நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிரு
நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

சத்தம் இல்லாத தனிமை (அமர்க்களம்):

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன் ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன் வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன் இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன் பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன் பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன் தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்
நிலவில் நனையும் சோலைக் கேட்டேன் நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன் கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன் எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன் தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன் பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன் பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன் ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன் வாழும்போதே சுவர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன் எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன் காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன் சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன் உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன் பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன் நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன் மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன் நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன் அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன் எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன் சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜராஜனின் வாளைக் கேட்டேன் வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன் பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன் மதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்
சொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன் தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற பொறுமையைக் கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன் புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன் இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன் தொலைந்துவிடாத பொறுமையைக் கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன் சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன் காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன் சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன் போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன் தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன் ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன் தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக்கிளிபோல் வாழக் கேட்டேன் குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று மரணம் மரணம் மரணம் கேட்டேன்